தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிவந்தா குளம் பள்ளி அருகே சிவந்தா குளம் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சாக்கடை கழிவுகளை கொட்டி உள்ளனர். ஆகவே உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல துணை செயலாளர் அர்ஜுன் கூறும் போது, தூத்துக்குடி, திருச்செந்தூர் செல்லும் சாலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான சிவந்தா குளம் பள்ளி இயங்கி வருகிறது. 1000 மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றார்கள். மாணவர்கள் படிக்கின்ற பள்ளிக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் சாக்கடையை சுத்தம் செய்கின்றோம் என்ற பெயரில் நகரத்தில் இருக்கக்கூடிய அத்தனை கழிவுகளையும், சாக்கடையில் இருக்கக்கூடிய அத்தனை கழிவுகளையும் எடுத்துக் கொண்டு பள்ளி வளாகத்தில் கொட்டி உள்ளார்கள் .
இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் தென்பாகம் காவல் நிலையத்தில் பூகார் அளித்துள்ளார். மேலும் கூடுதலாக அளவுக்கு அதிகமாக டிராக்டர் மூலமாக சாக்கடை கழிவுகளை மாநகராட்சி நிர்வாகம் நடு சாலையில் கொட்டி உள்ளது.
இங்கு படிக்கும் மாணவர்கள் நிம்மதியாக சாப்பிட முடியவில்லை. சாப்பிடும் போது துர்நாற்றம் வீசுகிறது. கண்ணீர் துளத்தில் அமர்ந்து நிம்மதியாக படிக்க முடியவில்லை என்கின்றனர். உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் இல்லையேன்றால் 500க்கும் மேற்பட்டோரை ஒன்று திராட்டுவோம் என்றனர்.