ஈரோடு பிப்ரவரி 27

ஈரோடு சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் டெக்ஸ்வேலி மால் வளாகத்தில் புதியதாக பார்ச்சூன் சிட்டி என்ற மிகப் பிரம்மாண்டமாக சிட்டி துவங்க உள்ளது. வரும் மார்ச் மாதம் டைட்டல் பார்க் அமைய உள்ளது. இதனை தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டு விழாவை துவக்கி வைக்கிறார். இந்த டைட்டல் பார்க் அமையும் இடத்திற்கு அருகிலேயே நமது பார்ச்சூன் சிட்டி அமைந்துள்ளது.

இது இனி பெரிய ஒரு தொழில் நகரமாக உருவெடுக்கும். இந்த பார்ட்சூன் சிட்டி என்பது தற்போது இயங்கி வரும் டெக்ஸ் வேலியே பார்ட் சூன் சிட்டிக்குள் தான் இருக்கப் போகிறது..

இங்கே டைட்டல் பார்க் மட்டுமின்றி மாபெரும் ஷாப்பிங் சந்தையே உருவாக உள்ளது..
இங்குள்ள மாள்களில் சர்வதேச தரத்தில் பல பல முன்னணி பிராண்டுகளில் கடைகள் (அவுட்லெட்டுகள்) சூப்பர் மார்க்கெட் முன்னணி உணவகங்களின் ரெஸ்டாரண்டுகள் ஃபுட் கோர்ட்டில் ஒரே நேரத்தில் 500 பேர் அமர்ந்து உணவு அருந்த கூடிய உணவு கூடம்.
120 கார்களுக்கு மேல் சார்ஜ் செய்யும் வசதி.மேலும் பறந்து விரிந்த சார்ஜ் ஸ்டேஷன் திரையரங்குகள் குழந்தைகள் விளையாடி மகிழ மெகா கேம் ஜோன். 1500 நபர் அமர கூடிய திருமண மண்டபம். மீட்டிங்,பங்க்ஷன் ஹால்.கார்ப்பரேட் அலுவலகங்கள் முன்னணி ரியல் எஸ்டேட் ப்ரொமோட்டர்கள் கட்டுகின்ற குடியிருப்புகள் என சகல விதமான வசதிகளுடன் நமது பார்ச்சூன் சிட்டியானது அமைய உள்ளது.


இது ஈரோட்டின் ஒரு அடையாளமாக வருங்காலத்தில் திகழும் என்பதில் ஐயமில்லை. நமது பார்சூன் சிட்டி மேற்கு தமிழ்நாட்டைமேலை நாடுகளுக்கு இணையாக உருவாக்குவது பார்ட்சூன் சிட்டியின் நோக்கம். இந்த பணிகள் அனைத்தும் 2026 மார்ச் ல் துவங்கி இன்னும் ஓராண்டுக்குள் நிறைவடையும் படி துரிதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன முதல் கட்டமாக துபாய் சிங்கப்பூர் போல பிரம்மாண்டமான யாரா ஹைப்பர் மார்க்கெட் 15 க்கு மேற்பட்ட இன்டர்நேஷனல் பிராண்டுகளின் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் புதிய அவுட்லெட்டுகள்.

18000 சதுர அடியில் குழந்தைகள் விளையாடி மகிழ பிரம்மாண்டமான பிரத்தியேக ரிலாக்ஸ் (relax fun zone) கேம்.மற்றும் மாத வாடகையில் 2 சீட்டர் முதல் 300 சீட்டர்கள் கொண்ட கார்ப்பரேட் அலுவலகங்களுக்கான ஒர்க் பிளேஸ்.

ஏராளமான சைவ அசைவ உணவு கூடம். 500 பேர் இருக்க 500 சீட்டருடன் ஃபுட் கோர்ட்.
3000 கார்ஸ் மற்றும் மூவாயிரம் டூவீலர்கள் நிறுத்தக்கூடிய விசாலமான கார் பார்க்கிங், டூ வீலர் பார்க்கிங் இவைகள் அனைத்தும் மூன்று மாதத்திற்குள் தயாராகும் பட்சத்தில் ஒர்க் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இரண்டாவது கட்டமாக தென்னிந்தியாவில் பிரபலமான சைவ அசைவ உணவுகளின் கடைகள் சர்வதேச தரத்தில் நவீன இடத்திற்கான பிரம்மாண்டமான வெட்டிங் ஹால். டிஜிட்டல் துல்லியத்துடன் திரையரங்குகள் ஒரே நேரத்தில் 120 கார்களுக்கு சார்ஜ் செய்யும் மிக பெரிய சார்ஜர் ஸ்டேஷன். இவை அனைத்தும் ஆறு மாதத்திற்கு துவங்க உள்ளது.

மூன்றாம் கட்டமாக பிரத்தியேக கார்பரேட் அலுவலகங்கள் ரியல் எஸ்டேட் ப்ரொமோட்டோர்களின் குடியிருப்புகள் அவுட்டோர் கேம்ஸ் டைட்டல் பார்க் அனைத்தும் ஓரிடத்தில் பார்ட்சூன் சிட்டி இல் அமைய உள்ளது.

இது எதிர்கால உலகம்..
இன்னும் சொல்ல போனால் இது ஈரோட்டின் முகம்…

இவை அனைத்தும் ஒரு வருடத்திற்குள் தயாராக நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறோம் 2027 ஆகஸ்ட் க்குள் முழுமையாக பணிகள் முடிக்கப்பட்டு நடைமுறைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம் என டெக்ஸ் வேலியின் எக்ஸ்கியூடிவ் டைரக்டர் திரு. டி.பி. குமார் மற்றும் துணைத் தலைவர் urc திரு சி. தேவராஜன் ஆகியோர் தெரிவித்தனர். உடன் சேர்மன் லோட்டஸ் ஐ பெரியசாமி மற்றும் ரவி, பொது மேலாளர் கோவர்தன், ஆகியோர் கலந்து கொண்டு பார்ட்சூன் சிட்டி ஐ விழா மேடையில் தொடங்கி வைத்தனர்.

நம் ஈரோட்டில் இந்த பார்ச்சூன் சிட்டி உருவாகும் பட்சத்தில் ஈரோடு பலம் பெருமை பெறும்..

ஈரோடு கோவை திருப்பூர் நாமக்கல் கரூர் இல் இருந்து இங்கு வரும் மக்கள் இந்த சிட்டிக்கு எளிதாக வந்து ஷாப்பிங் செய்ய வசதியாக இருக்கும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *