இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான திரு. இரா. நல்லகண்ணு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
​இந்நிலையில், அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஓவியர் UMT ராஜா, தனது தனித்துவமான கலைத்திறன் மூலம் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

பொதுவாக தூபங்கள் காட்டப் பயன்படும் எரியும் ஊதுபத்தியைக் கொண்டு, மிக நுணுக்கமாக திரு. நல்லகண்ணு அவர்களின் உருவப்படத்தை வரைந்து அவர் வியக்க வைத்துள்ளார்.

​இது குறித்து ஓவியர் ராஜா கூறுகையில்:
​”ஐயா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவருக்கு ‘செவ்வணக்கம்’ செலுத்தும் விதமாக, எரியும் ஊதுபத்தியைப் பயன்படுத்தி அவரது திருவுருவத்தை வரைந்து எனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளேன்” என்று தெரிவித்தார்.
​ஊதுபத்தியின் நெருப்பைக் கொண்டு காகிதத்தில் வரையப்பட்ட இந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *