காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

ஊதியூரில் திமுக தேர்தல் பரப்புரைக் கூட்டம்.!

காங்கயம் அருகே ஊதியூரில் திமுக சார்பில் தேர்தல் பரப்பரை பொதுக்கூட்டம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

ஊதியூர் காவல் நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவரும், திமுக திருப்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளருமான இல.பத்மநாபன் தலைமை வகித்தார். இதில் மாநிலங்களவை உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான அந்தியூர் பா.செல்வராஜ், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான மு.பெ.சாமிநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இந்தக் கூட்டத்தில் திமுக பேச்சாளர் சந்துரு, திமுக கட்சியின் குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், காங்கயம் ஒன்றிய செயலாளர்கள் சிவானந்தன், கருணை பிரகாஷ், நகரச் செயலாளர் சேமலையப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *