தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியரிடம் மனு.

தாராபுரம், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி சூரியநல்லூர் பகுதி மக்கள் தாராபுரம் வட்டாட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.

இது குறித்து தாராபுரம் வட்டாட்சியர் ராமலிங்கத்திடம், ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் தலைவர் அ.சு.பவுத்தன் கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது. தாராபுரம் தாலுகா, சூரியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மரவபாளையம் கிராமத்தில், சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் 23 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடோ, நிலமோ கிடையாது.

எனவே தங்களுக்கு வீடு கட்டுவதற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்திருந்தனர். இது தொடர்பாக சூரியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட மரவபாளையம் கிராமத்திற்கு நேரில் சென்று, விசாரணை மேற்கொண்டு, கோரிக்கை விடுத்துள்ள 23 குடும்பங்கள் இலவச வீட்டுமனை பட்டா பெறுவதற்கு தகுதியான நபர்கள் தான் என அறிக்கை அளித்துள்ளார். ஆனால், வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி பலமுறை கோரிக்கை மனு அளித்தும், தற்போது வரை பட்டா வழங்கப்படவில்லை.

எனவே, முன்னுரிமை அடிப்படையில் மேற்கண்ட 23 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த மனு கொடுக்கும் போது, ஆதித்தமிழர் ஜனநாயகப் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் மரவபாளையம் பகுதி மக்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *