புதுச்சேரி அரசின் விவசாயக் கல்லூரியான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு கம்யூன், செருமாவிலங்கை கிராமத்தில் இயங்கி வருகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வேளாண் இளங்கலை பட்டப்படிப்பு பயில்வதற்காக சேர்ந்த 92 மாணவ, மாணவியர் வேளாண் விரிவாக்கத்தின் அடிப்படைகள் என்ற பாடத்திட்டத்தை இணைப் பேராசிரியர் முனைவர் எஸ். ஆனந்த்குமார் தலைமையில் பயின்று வருகின்றனர்.

அதன்படி அந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் திருநள்ளாறு கம்யூன் மாதூர் கிராமத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மேற்பார்வையில் இயங்கி வரும் புதுச்சேரி அரசின் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.

விரிவியல் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் செந்தில்குமார் அறிமுக உரையாற்றினார். நிலையத்தின் குறிக்கோள், நோக்கம், செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். மேலும் அவர் மாணவ, மாணவியர் இடையே கருத்தியல் விவாதத்தை ஊக்குவித்தார். அப்போது விக்னேஷ், பவித்ரா திருச்செல்வம், ஐஸ்வர்யா மற்றும் லக்ஷய ஆகியோர் விவாதத்தில் ஆக்கத்துடன் பங்கேற்றனர் சக மாணவ மாணவியர் அனுபவ ரீதியாக கற்க உத்வேகம் அளித்தனர்.

நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வகித்த கால்நடை தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கோபு பாலா தலைமை உரை ஆற்றினார்.

தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் கதிரவன், பழங்களின் முக்கியத்துவத்தை மாணவ, மாணவியருக்கு எடுத்துரைத்து, 90 பேருக்கு தலா ஒரு பழம் நிலையத்தின் சார்பில் இலவசமாக வழங்கினார்.

நிலையத்தின் பண்ணை மேலாளர் திரு அந்தோணி தாஸ், விவசாயிகளுக்கு விதை விநியோக திட்டத்தை குறித்து எடுத்துரைத்தார் பூச்சியியல் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் திவ்யா, தேனீக்கள் வளர்ப்பு பற்றி செயல்முறை விளக்கத்துடன் பேசினார்.

உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் முனைவர் அரவிந்த், துறை சார்ந்த திட்டங்களை விளக்கினார் மீன்வள ஆய்வாளர் திரு முருகேசன் உள்நாட்டு மீன் வளர்ப்பு பற்றி கூறினார்.

அடுத்து சிறப்புரை ஆற்றிய பஜன்கோவா இணைப் பேராசிரியர் முனைவர் ஆனந்த்குமார், “நாடு முழுவதும் மாவட்டம்தோறும் நிறுவப்பட்டுள்ள 731 வேளாண் அறிவியல் நிலையங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை விவசாயக் கல்லூரி மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொண்டு விவசாயிகள் நலனுக்கு துணை புரியலாம்” என்றார். அதற்காக அதன் செயல்பாடுகளை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். அதற்காகவே இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மாணவர்கள் குகன் மற்றும் சாய் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை ஆவணமாக்கி மற்ற மாணவ, மாணவியர் பயன் பெற உதவினர்.

பஜன்கோவா கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சங்கர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, வேளாண் அறிவியல் நிலையத்தை தலைமைத் தாங்கி இயக்கி வரும் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் ரவி அவர்களின் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி பயிற்சி சிறப்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *