திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு சார்பில் 108- வது நவம்பர் புரட்சித்தின கொடியேற்று விழா நடைபெற்றது.
நிகழ்வில் வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார் தலைமை வகித்தார், ஒன்றிய துணைச் செயலாளர்கள் கே.செல்வராஜ், வி.பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.உதயகுமார் நவம்பர் புரட்சித்தினக்கொடியை ஏற்றி வைத்து, நவம்பர் புரட்சித்தின நிகழ்ச்சி வரலாற்றை பற்றி பேசினார்கள்.
நிகழ்வில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய பொருளாளர் து.கலியமூர்த்தி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்னராசா, சுமை பணி ஒன்றிய செயலாளர் எம்.ராஜேஷ்கண்ணா, எம்.கண்ணையன், ஆர்.சேகர், டி.மகேந்திரன், கே.எஸ்.விஜயகுமார், பிரபாகரன், ராஜா, ராமமூர்த்தி, விஜய், ராஜமாணிக்கம், பன்னீர்,செல்வம், சுரேஷ், சதீஷ், தமிழரசன், கலியபெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வலங்கைமான் நகர செயலாளர் பி.ராதா அனைவருக்கும் நன்றி கூறினார்.