அந்தியூர் சத்தி ரோட்டிலுள்ள தனியார் ஓட்டலில் த.வா.கட்சி சார்பில், தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அந்தியூர் தொகுதி செயலாளர் வேல்முருகன் வரவேற்றார். மாநில அமைப்புக்குழு நிர்வாகி மோகன்ராஜ் பவானி தொகுதி செயலாளர் பழனிச்சாமி, ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை நிலைய செயலாளர் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.
பவானி, அந்தியூர் தொகுதி விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான காவிரி ஆற்றின் உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், மதுவியக்கு ஆயத்தீர்வை துறையின் சார்பில், பவானி -காடையம்பட்டி மற்றும் அந்தியூர் – தவிட்டுப்பாளையம் பகுதிகளில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனிநபர் மதுபானக்கடை நடத்தும் முயற்சியை கைவிட்டு, அனுமதி தரக்கூடாது,
வெள்ளித்திருப்பூர் அருகே சென்னம்பட்டியில் இருந்து ஜரத்தல் செல்லும் வழியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைக்கு பதிலாக புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொகுதி செயலாளர்கள் இம்மானுவேல், ஆலயம் கார்த்தி, பரமசிவம், அந்தியூர் தொகுதி தலைவர் கைலாசம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.