கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் காட்டன் சிட்டி ஆகியோர் இணைந்து வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை பந்தய சாலையில் துவங்கிய வாக்கத்தானை மாவட்ட குற்றப்பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் பிரீத்தி,விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன்,மற்றும் ரோட்டரி செல்லா ராகவேந்தர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்..

இதில், விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனையின், துணை இயக்குநர் ஜெயராம்,பொது மேலாளர் ரெஜித் ராஜன் , பச்சிளங்குழந்தை மருத்துவர் மற்றும் குழந்தை மருத்துவர் டாக்டர் நித்யா பொன்முடி, மற்றும் பல்வேறு துறை ஆலோசனை மருத்துவர்கள், உடனிருந்தனர்..

தொடர்ந்து நடைபெற்ற நடைப்பயணத்தில் மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவர்கள், தாய்மார்கள் மற்றும் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய படி நடந்து சென்றனர்..

நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமானது என்றும், பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *