தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவன ஆடிட்டோரியத்தில் தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் தேனி கராத்தே அசோசியேஷன் இணைந்து மாவட்ட கராத்தே சாம்பியன் 2026 போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் தலைவர் . எஸ் எல்.ஜவஹர்லால் தலைமை தாங்கினார் வீரபாண்டி சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜெ.ஜெ.கலைவாணி, தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ.சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்த போட்டியை தேனி கராத்தே அசோசியேஷன் தலைவர் கராத்தே பயிற்சியாளர் பி.நாகராஜன் கராத்தே போட்டிகளை சிறப்பாக நடத்தி போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வெற்றி கோப்பை கேடயங்களை சௌராஷ்டிரா கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ் எல் ஜவஜர்லால் சௌராஷ்ட்ரா கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜெ.ஜெ. கலைவாணி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஏ சந்திர போஸ் ஆகியோர் கராத்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் கேடயங்கள் வெற்றி கோப்பைகள் வழங்கி வெற்றி பெற்ற மாணக்கர்களை ஊக்கப்படுத்தினார்கள் இந்தபோட்டிக்கான ஏற்பாடுகளை சௌராஷ்ட்ரா கல்லூரி உடற்கல்வி இயக்குனர் பி.ராஜதுரை வெகு சிறப்பாக செய்து இருந்தார்.