தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவையை அழைப்பார்கள். நூர்பாலைகள், சிறுகுரு தொழில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மென்பொருள் நிறுவனங்கள் என, அனைத்து தொழில் வளங்களையும் கொண்டது கோவை. அப்படிப்பட்ட கோவை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி நகர வேண்டியுள்ளது.
அதற்கு முத்தாய்ப்பான திட்டமாக, தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு. க. ஸ்டாலின் அவர்கள் வகுத்துள்ள திட்டமே மாஸ்டர் பிளான் 2 . இத்திட்டத்தின் வாயிலாக, உலகத்தில் உள்ள முன்னணி நகரங்களுக்கு நிகரான நகரமாக கோவை வளரும். மாஸ்டர் பிளான் செயலாக்கத்தின் வாயிலாக, பல்வேறு துறைகள் அபரிவிதமான வளர்ச்சி அடையும்.
இதனால் கோவையில் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, அனைவருக்கும் பெரும் வேலை வாய்ப்பை தரும். நவீன அறிவியல் உலகத்திற்கு ஏற்ற வகையில், 2041 ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் திட்டம் வகுத்திருப்பது,
கோவையை இந்தியாவில் முன்மாதிரி நகரமாக மாற்றும் முயற்சி என்றே நாங்கள் நம்புகிறோம். நகர்ப்புறம், கிராமப்புறம் என பலதரப்பட்ட கட்டமைப்பை உள்ளடக்கிய கோயம்புத்தூருக்கு, சரியான நேரத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மாஸ்டர் பிளான் அறிவித்துள்ளார்.
பல்வேறு சிறந்த பிளான்களை வகுத்த, பிளான்களின் மாஸ்டர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மக்கள் கடமைப்பட்டுள்ளார்கள் என்றே உணர்கிறோம்.
பல்வேறு பிளான்களில் மாஸ்டராக திகழும் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ள கோவைக்கான மாஸ்டர் பிளான் 2, கோவை வளர்ச்சிக்கு ஒரு பெரும் மைல்கல்லாகவே பார்க்கின்றோம் வரலாறு பேசும் மாஸ்டர் பிளான் 2 வெளியிட்ட முதல்வருக்கு, பல் சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி…..
இப்படிக்கு,
ஹாஜி. ஜெ. முகமது ரஃபி,
தலைவர் , பல்சமய நல்லுறவு இயக்கம்……
உறுப்பினர் – தமிழ்நாடு சிறுபாண்மை ஆணையம்.