கே.சி.ஐ.நிறுவனத்தின் ரிமோட் கண்ட்ரோல் களையெடுக்கும் இயந்திரம்
கோவையில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் 2025 கண்காட்சியில் கோவை கிளாசிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரிமோட் கண்ட்ரோல் களையெடுக்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது
வேளாண் தொடர்பான இந்திய அளவில் முதன்மையான அக்ரி இன்டெக்ஸ் 2025 எனும் வேளாண் கண்காட்சி கோவை கொடிசியா அரங்கில் துவங்கியது..
ஐந்து நாட்கள் நடைபெற உள்ள இண்டெக்ஸ் விவசாய கண்காட்சி மொத்தம் 7 அரங்கில் நடைபெற்று வருகிறது விவசாயிகள் பயன் பெறும் விதமாக நடைபெற்று வரும் இதில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வேளாண் தொடர்பான நவீன இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன..
கண்காட்சியில் ஒவ்வொரு ஆண்டும் பங்கு பெறும் கோவையை சேர்ந்த கே.சி.ஐ.நிறுவனம், தனது புதிய ரிமோட் கண்ட்ரோல் களையெடுக்கும் இயந்திரத்தை கண்காட்சி அரங்கில் அறிமுகம் செய்தனர்..
இது குறித்து கோவை கிளாசிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரிஷி கூறுகையில், விவசாயம் தொடர்பான துறையில் ஆட்கள் பற்றாக்குறையை போக்கும் விதமாக எங்களது நிறுவனம் தொடர்ந்து பல்வேறு நவீன தொழில் நுட்ப விவசாய உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்து வருவதாக தெரிவித்த அவர்,அந்த வரிசையல் ரிமோட் வாயிலாக இயங்கும் களையெடுக்கும் இயந்திரத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்தார்…