C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
மாற்றுதிறனாளிகளுக்கான விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திறந்து வைத்தார்..
கடலூர்,மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின்கீழ் வட்டார விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவிக்கையில்,உலக வங்கி நிதியுதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் ரூ.1753 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கடலூர், தர்மபுரி,தென்காசி, திருச்சி மற்றும் சென்னை மாவட்டங்கள் முன்னோடி மாவட்டங்களாக தேர்வு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் மறுவாழ்வு சேவைகள் மற்றும் திட்டங்கள் சென்றடைய உருவாக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கடலூர் மாவட்டத்தில் உட்கோட்ட அளவில் கடலூர்,சிதம்பரம் மற்றும் மங்களம்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் நேற்று திறக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், வட்டார அளவில் 20 விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களில் 18 மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மீதம் உள்ள கடலூர் மாநகராட்சி மற்றும் வடலூர் சேவை மையங்கள் இன்று முதல் செயல்பட உள்ளது.
மாநகராட்சி வட்டார ஒருங்கிணைந்த சேவை மையம் புதுப்பாளையம் நாட்டாண்மை கட்டிடத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது. நாட்டாண்மை கட்டடம் சீரமைக்கப்பட உள்ளதால் தற்காலிகமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திறந்து வைக்கப்படுகிறது. கட்டடம் சீரமைக்கும் பணிகள் முடிந்தவுடன் ஒருங்கிணைந்த சேவை மையம் இடமாற்றம் செய்யப்படும்.
இம்மையத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான உளவியல் பயிற்சி, இயன்முறை பயிற்சி, சிறப்பு ஆசிரியர்களை கொண்டு அறிவுசார் குறைபாடுடைய, செவின் திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகள் வழங்கப்பட உள்ளது. வட்டார மையங்களில் முன்கள பணியாளர்கள் 3 சமுதாய வழிநடத்துனர்கள், 7 சமுதாய மருவாழ்வு பணியார்களை கொண்டு அனைத்து மையங்களிலும், அனைத்து வட்டாரங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வீடுகளை கண்டறிதல், மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகளை கண்டறிதல் மற்றும் கணக்கெடுத்தல், மையங்களுக்கு வரஇயலாத மாற்றுத்திறனாளிக்கு இல்லங்களுக்கே சென்று தேவையான பயிற்சிகளையும், தேவைகேற்ப உதவி உபகரணங்களும் வழங்கபட உள்ளனர். வட்டாரத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் இம்மையத்தினை அணுகி உடல் நலத்தை மேம்படுத்தி வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சார்ஆட்சியர் கிஷண்குமார், மாற்றுத்திறனாளி நல அலுவலர் பாலசுந்தரம், மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.