தஞ்சாவூர். ஜூலை- 20.

தஞ்சையில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த “HAMLY TOWERS” ஐடி பார்க் நிறுவனர் ஹம்சவர்தன் மோகன், வெளிநாடுகளில் பல்வேறு ஐடி கம்பெனிகளில் பணியாற்றி கடந்த 2016-ம் ஆண்டு தஞ்சைக்கு திரும்பியதும் சொந்த ஊரில் 10×10 சதுர அடியில் ஒரே ஒரு பணியாளருடன் ஐடி நிறுவனத்தை துவங்கியவர்,
இன்று தஞ்சையில் பல்வேறு கட்டிடங்களில் 1000 பணியாளர்களை கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் ஐடி சுகாதார சேவை பணிகளில் ஈடுபட்டு வரும் ஹம்சவர்தன் மோகன்.
தஞ்சை மருத்துவ கல்லூரி அருகில் 69 ஆயிரம் சதுர அடி நிலத்தில் பிரமாண்ட ஐடி பார்க் கட்டிடத்தை கட்டியுள்ளார்.

இந்த கட்டிடத்தில் கருங்கற்கள், சிமெண்ட் எதுவும் பயன்படுத்தாமல் உயர்தர எஃகு பயன்படுத்தி 6 மாடி கட்டிடம் (கிரவுண்ட் உள்பட) கட்டியுள்ளார்,

இதுகுறித்து தனது சொந்த மண்ணான தஞ்சையை நேசிக்கும் ஹம்சவர்தன் மோகன் கூறுகையில், டெல்டா மாவட்டத்தில் உள்ள ஐடி மாணவர்கள் சுமார் 7 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கத்தோடு இந்த ஐடி நிறுவனம் தொடங்கப்பட்டு உள்ளதாகவும். “HAMLY TOWERS” என்ற ஐடி பார்க் நிறுவனம் இது முழுவதும் எஃகு பயன்படுத்தி கட்டப்பட்டதாகும், தஞ்சாவூர் தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் மட்டுமல்லாது ஐடி ஊழியர்களுக்கு மையமாகவும் அமைய உள்ளது.

தஞ்சாவூரின் வளர்ச்சி மிக வேகமாக உள்ளது, புதிதாக பொறுப்பேற்ற அரசு இதை பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், வெளிநாட்டு ஐடி நிறுவனங்கள் சென்னையை மட்டுமல்லாது தஞ்சாவூருக்கும் வரவேண்டும் அதற்கு அரசு வழிகாட்ட வேண்டும் என்றும் AI தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், 80 சதவீத பணியை எடுத்துள்ள AI ஐடி வேலையில் அதன் பயன்பாடு அதிகமாக இருக்கும், வேலை வாய்ப்புகள் குறையாது என்று கூறினார், இந்நிறுவனம் கடந்த 2024 ஆம் ஆண்டு தனது ஆரம்ப கால பணியாளர்களின் பணியை பாராட்டி 11 சொகுசு கார்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது, இக்கட்டிட கட்டுமானம் குறித்து பொறியாளர் விஜய் ஆனந்த் கூறுகையில், ஸ்டீல் கட்டிட கட்டுமானம் முன்கூட்டியே திட்டமிட்டால் விரைவில் எளிதாக முடிக்க முடியும், கட்டிட கட்டுமானத்தில் அடித்தள (Basement) கட்டுமானம் செலவு 30 சதவீதம் சென்று விடும், ஆனால் ஸ்டீல் கட்டுமானம் மூலம் செய்தால் 15 சதவீதம் குறைந்து விடும், ஒட்டுமொத்தமாக ஸ்டீல் கட்டுமானத்தால் செலவு குறைவு இது போன்ற கட்டிடம் கட்டுவதால் வணிக நோக்கத்திற்கு கொடுத்து வாடகை பெறலாம், கட்டிடத்தை வேகமாக கட்டலாம். கட்டிடத்தை மாற்றி அமைக்கவும் முடியும் வித்தியாசமான முயற்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த திட்டம் செய்யப்பட்டது.

தஞ்சாவூரில் கட்டிட தொழிலாளர்கள் கிடைப்பது இல்லை, தொழிலாளர்கள் தட்டுப்பாடு உள்ளது, ஆகவே செலவை குறைக்க ஸ்டீல் கட்டுமானம் செய்யப்பட்டது, சுமார் 60 கோடி மதிப்பில் உள்புறம் அலங்காரம், வெளிப்புற உயர்தரகண்ணாடி மற்றும் லிப்ட் வசதியுடன் A கிரேடுடன் செய்யப்பட்டுள்ளது, கடந்த 10 மாதத்தில் இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது என கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *