மன்னார்குடி., பிப். 27

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் தொழிலாளர் சங்கத்தின் தலைமை செயற்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது.
இதில் அகில இந்திய தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், துணைசெயலாளர் நடராஜன் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.
இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழில்முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் அமைச்சர் ஆர். பி. ராஜா கலந்து கொண்டு பேசினார் அப்போது தமிழக முதல்வர் தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவத்தை தொடர்ந்து வழங்கி வருகிறார்.
ஆனால் கல்விக்கு கொடுக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு கொடுக்கவில்லை நாடு முழுவதும் சராசரியாக பெற்ற வளர்ச்சி விகிதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருக்கிறது.
இந்தியாவிலேயே தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது முதலீடுகளை ஈர்க்கும் போதெல்லாம் தமிழ்நாடு முதல்வர் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் வந்தது என்று கேட்பதைவிட எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கேட்பதுதான் அதிகம் இதற்கு காரணம் தமிழக முதலமைச்சரின் சிறந்த நிர்வாக திறமையும், முதலீடுகளை தமிழகத்தின் பக்கம் ஈர்த்ததும் தான் காரணம் என்றார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திருவாரூர் மாவட்டத்தில் அதிக அளவில் அமைக்கப்பட்டு, கடந்த பல ஆண்டுகளை விட இந்த ஆண்டும் அதிகபட்இதில் அகில இந்திய தொமுச நிர்வாகிகள் சண்முகம், நடராஜன் ஆகியோர் கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். நுகர்பொருள் வாணிபக் கழக தொமுச மாநிலத் தலைவர் கோசி வள்ளுவன்
தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா கலந்து கொண்டு சிறப்பறையாற்றினார்.