சென்னை, திருவொற்றியூர், ராமநாதபுரம் 10வது தெருவில், சுனிதா, கோகிலா ஆகிய இருவர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் படி, ஏரி என குறிப்பிட்டு, 30 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான இடத்தை, நீர் நிலை ஆக்கிரமிப்பு எனவும், அதனை அகற்றக் கோரியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற தாசில்தார் சகாயராணி தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் போலீசார் ஜேசிபி மற்றும் பொக்லைன் எந்திரங்களுடன் அந்த இடத்திற்கு வந்தனர்.
அப்போது, இடம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாகவும் எனவே அகற்றும் பணியை தற்காலிகமாக நிறுத்த கோரி குடியிருப்பு வாசிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் சுவாதி என்ற மாற்றுத்திறனாளி பெண் தனது இடம் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின், சட்டம் ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடத்தப்பட்டு அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர். இச்ச சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.