முதுகுளத்தூரில்நள்ளிரவில் பலசரக்கு கடையைஉடைத்து 20 ஆயிரம் மற்றும் சிகரெட் பிஸ்கட் பாக்கெட் திருட்டு. மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு. முதுகுளத்தூர்.நவ7 முதுகுளத்தூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ராஜா முகம்மது மகன் அப்துல்மாலிக்(32) இவர் முதுகுளத்தூர் காந்தி சிலை அருகில் பஸ்ஸ்டாப் எதிரே கே.என்.ஸ்டோர் என்ற பெயரில்பல சரக்கு கடை நடத்தி வருகிறார்..

நேற்று இரவில் 9.30.மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் கடப்பாரை கொண்டு உடைத்து கடையில் இருந்த ரொக்கம் 20 ஆயிரம் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்கள், சிகரெட் பண்டல்களை தூக்கிச் சென்று வழிநெடுக போட்டு சென்றுள்ளனராம்.

அதிகாலையில் டீ கடைக்கு வந்தவர்கள் கடை உடைக்கப்பட்ட விபரம் கூறியதால் உடனடியாக கடைக்கு வந்து பார்த்தபோது திருடு போயிருப்பது தெரியவந்ததால் முதுகுளத்தூர் போலீசில் புகார் செய்தார். முதுகுளத்தூர் டிஎஸ்பி சண்முகம் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பள்ளி வாசல் தெருவில் உள்ள கேமரா புட்டேஜ்களை கைப்பற்றி பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *