பாப்பிரெட்டிப்பட்டி சார்பு நீதிமன்றம் முன்பு பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்ய கோரி நீதிமன்ற பணியினை புறக்கணித்து 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சார்பு நீதிமன்ற கட்டிடத்தில் கழிப்பறை வசதிகள் இல்லாததாலும் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்திற்கு பதிலாக இப்பகுதிக்கு மூன்று நீதிமன்றங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் வேண்டுமென்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்

அதன்படி பாப்பிரெட்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் ஐந்தரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 33 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசிற்கு தரவுகள் அனுப்பப்பட்டிருந்தன, தற்போது ஒரு வருட காலத்திற்கு மேலாகியும் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யாமல் அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை அரசு தொடர்ந்து வஞ்சித்து வருவதாக தெரிவித்து

பாப்பிரெட்டிப்பட்டி வழக்கறிஞர்கள்சங்கத்தினர் நீதிமன்ற கட்டிடம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று சங்கத் தலைவர் கோபி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு தங்களது பணிகளை புறக்கணித்து கண்டன கோஷங்களை எழுப்பி சுமார் இரண்டு நேரத்திற்கு மேலாக தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் அரசு புறக்கணித்து வந்தால் அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தப் போவதாக தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *