வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின் ” முகாமில் பொதுமக்களிடமிருந்து கலெக்டர் மற்றும் எம் எல் ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஊராட்சியில் பூனாயிருப்பு, சாரநத்தம், பூந்தோட்டம், ஆலங்குடி, திருவோணமங்கலம் உள்ளிட்ட ஜந்து ஊராட்சிகளுக்கான “உங்களுடன் ஸ்டாலின் ” முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காலை முதலே பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்டவைகள் தொடர்பான 500 க்கும் மேற்பட்ட மனுக்களை வழங்கினர். முகாமிற்கு வருகை தந்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் மோகனச்சந்திரன் மற்றும் எம் எல் ஏ பூண்டி கே. கலைவாணன் ஆகியோர் பொதுமக்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டு அறிந்தனர். நிகழ்ச்சியில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் வீ.அன்பரசன், வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவநேசன், ஆலங்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.எம். மோகன், வலங்கைமான் வட்டாட்சியர் ஓம் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சிவக்குமார் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.