தாராபுரம் செய்தவர் பிரபு
செல்:9715328420
குண்டடம் அருகே மக்காச்சோளம் அரைக்கும் மிஷினில் சிக்கி வடமாநில தொழிலாளி சாவு.
குண்டடம் அருகே மக்காச்சோளம் அரைக்கும் மிஷினில் சிக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
குண்டடம் அருகேயுள்ள மருதூரில் தனியார் கோழி தீவனம் தயாரிக்கும் மில் உள்ளது. நேற்று காலை அந்த மில்லில் மக்காச்சோளத்தை அள்ளி மிஷினில் போடும் வேலையில், பீகார் மாநிலம் சங்க்ராம்பூர் அருகேயுள்ள மங்களூரைச் சேர்ந்த ஷானி என்பவரது மகன் ரட்ன்ஜய்குமார்(18) ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சோளம் அரைக்கும் மிஷினுக்குள் விழுந்துவிட்டார்.
இதல் பலத்த காயமடைந்த ரட்ன்ஜய்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இஓபற்றிய புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.