சேரன்மகாதேவி குறு வட்ட இறகுபந்து போட்டிகள் வடக்கு அரியநாயகிபுரம் அரசு மேல்நிலை பள்ளி சார்பாக , நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.அப்போட்டிகளில் சேரை வட்டர பள்ளிகள் கலந்து கொண்டன.அப்போட்டிகளில் நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவ/மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்று,திருநெல்வேலி வருவாய் மாவட்டப் போட்டிற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
வெற்றி பெற்று மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, பள்ளி தலைமையாசிரியர் திருமதி. ரோகிணி தலைமை தாங்கி ,வாழ்த்துக்களை கூறினார்.பள்ளி உதவி தலைமையாசிரியை திருமதி.மைமுனிசா முன்னிலை வகித்தார்.கலந்து கொண்ட அனைவரையும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனைவர்.வெ.பெரியதுரை வரவேற்று பேசினார்.அந்நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர்கள் திரு.தேவராஜ், திருமதி.வேணி, திரு.செந்தில், திரு.தர்மதாசன்,திரு.சேர்மத்துரை, திரு.கண்ணன் ,திரு.சுதாகர்,ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.போட்டிகள் ஒருங்கிணைப்பாளராக குறுவட்ட இணைச்செயலாளர் திரு.எட்வின் சுதாகர் செயல்பட்டார்.பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திரு.கோமதிசங்கர் நன்றி கூறினார்.
வெற்றி பெற்றவர்கள் விவரம் 19 வயதிற்குட்ட மாணவர்கள் பிரிவு இறகு பந்து இரட்டையர் போட்டியில் நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி முதலிடம் 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் ஒற்றையர் பிரிவு நடுக்கல்லூர் அரசு மேல்நிலை பள்ளி இரண்டாமிடம்
17 வயதிற்குட்பட்ட மாணவிகள் இறகு பந்து இரட்டையர் பிரிவு
அரசுமேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் முதலிடம் பெற்ற மாணவர்கள் திருநெல்வேலி வருவாய் மாவட்டப் போட்டிற்கு தகுதி பெற்றுள்ளார்கள்.அம்மாணவனுக்கு பள்ளி ஆசிரிய ஆசிரியைகள் மற்றும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.