தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளி மாணவர்கள் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம், சமூக வலைதளங்கள் வாயிலாக இணையம் வழியாக நடைபெற்ற என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் ரீல்ஸ் , கவிதை ,பேச்சு,ஓவிய போட்டிகளில் பங்கேற்றனர்.
கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு , செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம், சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு போட்டிகள் இனையம் வழியாக பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்டன.
இதில், மாணவர்களிடம் தமிழக அரசின் மாணவர்கள் நலன் தொடர்பான பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாக போட்டிகள் நடத்தப்பட்டன அதன்படி, தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் என் பள்ளி,என் பெருமை என்கிற தலைப்பிலான ஓவியம், கவிதை,கட்டுரை போட்டிகளில் பல மாணவர்கள் பங்கேற்றனர்.
வீடியோவாக பேசி ரீல்ஸ்ம் எடுத்து அனுப்பப்பட்டது என் பள்ளி என் பார்வையில், நான் என் பள்ளியின் பேச்சாளன்,என் பள்ளி என் கலை ,என் கதை என் எழுத்தில் என்கிற தலைப்புகளின் கீழ் கொடுக்கப்பட்ட தகவல்களில் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் முத்துலெட்சுமி,சிந்து ஆகியோர் செய்து இருந்தனர்.