தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கார்தன அள்ளி கிராமம், தண்டுகாரன அள்ளியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது; எங்க ஊரில் அறநிலையத்துறைக்கு சேர்ந்த கரக செல்லியம்மன் கோவில் நிலம் 33 ஏக்கர் 42 சென்ட் நிலம் பொது இடம் விடாமல் அறங்காவலரின் கட்டுப்பாட்டில் உள்ளது

இதனால் திருக்கோவிலுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது கோயில் நிலம் பொது ஏலம் விடுதல் சம்பந்தமாக பலமுறை பல துறைகளுக்கு மனு வைத்து எந்த பலனும் ஏற்படவில்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உயர்நீதிமன்றத்தில் மூன்று முறை பொது இடம் நடத்துவதற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

சேலம் இனி ஆணையர் புதிய இடம் நடத்துவதற்கு ஒரு முறை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை அறங்காவலர் அறநிலைத்துறையை சேர்ந்த அதிகாரிகள் இதுவரையில் செயல்படுத்தவில்லை ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியது நீதிமன்றத்தை அவமதிக்கின்றனர்.

அறநிலைத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் அறநிலையத்துறையிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு அறங்காவலியிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அறங்காவலருக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். குறிப்பாக முன்னாள் ஆய்வாளர் துரை, இன்னால் ஆய்வாளர் கோமதி நீதிமன்ற உத்தரவை அறநிலைத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் செயல்படுத்தாமல் எங்களுடைய மனுவிற்கு அரசு அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்காததால் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி 28/7/2025 திங்கட்கிழமை அன்று கரக செல்லியம்மன் திருக்கோயில் நிலம் அறங்காவலிடம் ஆக்கிரமிப்பில் இருந்து ஊர் பொதுமக்கள் வசம் சுவாதீனம் பெறுகிறோம்.

அரசு அதிகாரிகள் அறநிலைத்துறை அதிகாரிகள் திருக்கோவில் நிலத்தை ஊர் பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்றி சோதனை எடுத்து பிறகாவது பொது ஏலம் நடத்த முன்வர வேண்டும் என்று இவ்வாறு இந்த மனுவில் தெரிவித்துள்ளனர். இதில் ஊர் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *