கணக்கன்பட்டி – ஓம் ஸ்ரீ சற்குரு சித்தர் பீடம்12 ஆம் ஆண்டு மகா குரு பூஜை விழா


திண்டுக்கல் மாவட்டம் கணக்கன்பட்டியில் அமைந்துள்ள ஓம் ஸ்ரீ சற்குரு சித்தர் பீடத்தில் 12 ஆம் ஆண்டு மகா குரு பூஜையை முன்னிட்டு சிறப்பான தொடர் அன்னதான சேவை நடைபெற்றது.

இந்த புனித நிகழ்வில் வில்லியனூர் சிவமயம் உழவாரப்பணி குழு சார்பில் 30 சிவனடியார்கள் கலந்து கொண்டு இரு நாட்கள் தங்கி சேவை செய்தனர்.
அவர்கள் அன்னதானம் வழங்குதல், பக்தர்களை ஒழுங்குபடுத்துதல், கோவில் பணிகளில் உதவுதல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டு குருபூஜை விழாவை சிறப்பித்தனர்.

மகா குரு பூஜை நாளில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சற்குருவின் அருளைப் பெற்றனர். ஆன்மிக உணர்வும், சேவை மனப்பான்மையும் ஒருங்கிணைந்த இந்த நிகழ்வு பக்தர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
அன்னதானம் பெருந்தானம்” என்ற உயர்ந்த கருத்தை நடைமுறையில் வெளிப்படுத்திய வில்லியனூர் சிவமயம் உழவாரப்பணி குழுவினருக்கு பக்தர்கள் பாராட்டுகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *