மன்னார்குடி., மார்ச். 01

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மதிமுக மன்னார்குடி தெற்கு மாவட்டம் நகர செயலாளர் சண்.சரவணன் இல்ல மணவிழாவிற்காக வரும் 7ம் தேதி வருகை தரும் மதிமுக கழக முதன்மை செயலாளர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை. வைகோ வருகை சம்பந்தமான பணிகள் குறித்து இன்று கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒருங்கிணைந்த திருவாரூர் மாவட்டத்திற்கு சுப நிகழ்விற்காக முதல் முறையாக வருகின்ற கழகத்தின் முதன்மைச் செயலாளர் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை.வைகோ எம்பி அவர்களுக்கு திருவாரூர் மாவட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

இதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஒருங்கிணைந்த திருவாரூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் பி.ஜி. செங்குட்டுவன் அவைத் தலைவர் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் மதிமுக தெற்கு மாவட்டம் மாவட்ட செயலாளர் பா பாலச்சந்திரன் முன்னிலை வகித்தார்.காசி வடிவேல் மாவட்ட செயலாளர் வடக்கு மாவட்டம் , கோவை சேகர் மாவட்ட பொருளாளர் தெற்கு மாவட்டம் , தீர்மானங்களை தெற்கு மாவட்டம் மாவட்ட துணைச் செயலாளர் பா.செந்தில் முருகன் எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் ராஜமாணிக்கம் நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர், மாசிலாமணி மன்னார்குடி ஒன்றிய செயலாளர் , கோவி. கோபி குடவாசல் ஒன்றிய செயலாளர்,சிவா நன்னிலம் ஒன்றிய செயலாளர் , பிரதாப் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் , தீபமோகன் திருத்துறைப்பூண்டி நகர செயலாளர், எஸ். சரளா மாவட்ட துணை செயலாளர் வடக்கு மாவட்டம் மற்றும் தஞ்சை தெற்கு மாவட்ட சாஞ்சி ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமான மதிமுக கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி யின் நிறைவில் மன்னார்குடி தெற்கு மாவட்டம் நகர செயலாளர் சண்.சரவணன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *