ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா விருப்பம் மனு தாக்கல்.
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் திமுக தலைமை விருப்பமனு பெறப்பட்டு வருகிறது. வருகிற வெள்ளிக்கிழமை வரை விருப்பமனு பெருவதற்கான காலக்கெடு உள்ளது. இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா திமுக தலைமை அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியிடம் ஒன்றிய செயலாளர் இளையராஜா விருப்பமனுனவ காண்பித்து வாழ்த்துக்களை பெற்றார். அதுபோல தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மீன்வளம் மீனவர்நலம் மற்றும் கால்நடை துறை அமைச்சருமான மனித ராதாகிருஷ்ணனிடமும் திமுக ஒன்றிய செயலாளர் இளையராஜா விருப்ப மனுவை காண்பித்து வாழ்த்துக்களை பெற்றார்.