தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி நிர்வாகம் மாதந்தோறும் ஒரு அனாதை இல்லம் சென்று மாணவர்களிடையே மனிதாபிமான மற்றும் சமூகப் பொறுப்பை வளர்க்க கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது

அந்த வகையில் கல்லூரி நிறுவனச் செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் எம் எல் ஏ தலைமையில் கல்லூரி இணைச் செயலர் என் எம் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் கல்லூரி ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா முன்னிலையில் கணினி அறிவியல் துறை தலைவர் எம் பாபி எம்.பாபி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் எஸ் பத்மபிரியா பேராசிரியர்கள் மற்றும் கல்லூரியைச் சார்ந்த 70 மாணவிகள் விரிவாக்க செயல்பாட்டு பணிக்காக extension Activity போடி தர்மத்தப்பட்டியில் உள்ள நிர்மலா நடுநிலைப்பள்ளி குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுக்குத் தேவையான ஆடைகள் இனிப்புகள் பிஸ்கட் பேனா பென்சில் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட அவர்கள் பயன்படுத்தும் தேவையான பொருள்களை வழங்கி அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள் மேலும் மாணவிகள் காப்பகத்தில் இருப்போருக்கு அவருடைய மனம் புத்துணர்வு பெற பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *