நடைபெற இருக்கின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள
திருமதி மு.அனுசியா முதுகலை வணிகவியல் கல்வியியல்., அவர்களை பொறுப்பாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கலந்து ஆலோசணை புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ரைஸ் மில் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
தொடக்க நிகழ்வாக உறுதி மொழியும் மறைந்த சுதந்திரப் போராட்ட போராளி ஐயா நல்லகண்ணு அவர்களுக்கு வீரவணக்கம் செய்து நிகழ்வு தொடங்கப்பட்டது.
நிகழ்விற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மா. மு. தமிழ் நேயன்
சு அன்னலட்சுமி ஆகியோர் தலைமையிலும் மண்டல செயலாளர் இ மாரிமுத்து அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வில் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து மாநில பாசறை பொறுப்பாளர்கள் அந்தோணி பிச்சை செ. பரதேசி,துரைசிங் செந்தில்குமார் மாவட்ட பொறுப்பாளர்கள் முத்துகிருஷ்ணன் செல்லப்பா முருகன் சேரந்தை ராஜ் மாடசாமி சுடலைமணி மற்றும் சிவகுமார் முத்துக்குமார் கொலஞ்சி உறவுகள் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள் நன்றியுரை மாவட்டச் செயலாளர் தேவராஜ் அவர்கள் நிகழ்த்தி நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.