பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசத்தில் ஆபுதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் நடைபெற்ற, நோன்பு திறக்கும் நிகழ்ச்சி..
1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் அமைந்துள்ள ஆபுதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.
நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பாபநாசம் பகுதிகளை சுற்றியுள்ள ஜமாத்தார்கள், பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், இமாம்கள் மற்றும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.