விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள பள்ளித்தென்னல் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அமிர்தலிங்கேஸ்வரர் ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு 13 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது.

கடந்த 21/ 2 /2026 சனிக்கிழமை அன்று கோவிலில் கொடியேற்றப்பட்டது அதனைத் தொடர்ந்து பல்வேறு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் தினமும் நடைபெற்று வந்தன. இதனை அடுத்து நேற்று முன்தினம் சுவாமிக்கு திருக்கல்யாணம் வைபோகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *