திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நகரத்தில் விசுவ இந்து பரிஷத் சார்புடைய பூசாரிகள் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு ஓய்வு அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தலைமையில் இரா.சதாசிவம் தலைமையில் நடைபெற்றது.

முன்னிலை மாநிலத் துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், கே எஸ் மூர்த்தி மாவட்ட செயல் தலைவர் ஆகியோர் முன்னிலை வசித்தனர்.

கீழ்க்கண்ட கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பூசாரிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் 60 வயது நிறைவடைந்த அனைத்து பூசாரிகளுக்கு ரூ.5ஆயிரம் ஓய்வுத்தியம் வழங்க வேண்டும்.

கோவில் வருவாயை கோவிலுக்கு கோவில் சார்ந்த பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆன்மிகவாதிகளை மட்டுமே கோவிலில் அறங்காவலர்களாக நியாயமிக்க வேண்டும்.

அடுத்த மாதம் மார்ச் 11 ஆம் தேதி திருவண்ணாமலையில் நடக்கும் மாநாட்டிற்கு அனைத்து பூசாரிகளுக்கும் கலந்து கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்டன நிகழ்ச்சியின் இறுதியாக பூசாரி பேரவை நகரத் தலைவர் மரிய தாஸ் நன்றி உரை ஆற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *