ஆசிய மலைப்பாதை சர்வதேச மிதிவண்டிப் போட்டியில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
அண்மையில் அருணாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மலைப்பிரதேச சைக்கிள் போட்டியில் , கோவையை சேர்ந்த கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில் பயிலும் அபினவ்,ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் பயிலும் பிரனேஷ் மற்றும் சுகுணா பிப் பள்ளியில் பயிலும் சச்சின் தேவ் ஆகிய மூன்று மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில்,கேம்ஃபோர்டு பள்ளியில் பயிலும் அபினவ் இரண்டு தங்கமும்,ஆஸ்ரம் பள்ளி மாணவர் பிரனேஷ் ஒரு தங்கமும்,சுகுணா பிப் பள்ளி மாணவர் சச்சின் தேவ் வெண்கலம் பதக்கம் வென்று அசத்தினர்..
இதனை தொடர்ந்து,பிப்ரவரி 26 முதல் 28 ஆம் தேதி வரை ,ஹிமாச்சல் பிரதேசத்தின் பீரில் (Bir) நடைபெற்ற சர்வதேச அளவிலான (Asia Mountainbike Series) ஆசிய மலைப்பாதை மிதிவண்டித் தொடரில் மூவரும் கலந்து கொண்டனர்..
சர்வதேச மிதிவண்டி சங்கத்தின் அங்கீகாரத்துடன் ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கு பெற்ற இதில்,அபினவ் வெள்ளி பதக்கமும்,இதே போல பிரனேஷ் ஒரு வெள்ளியும்,ஐந்தாவது இடத்தில் சச்சினும் இடம் பிடித்தனர்
இமாச்சல் பீர் நகரில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் ,இமயமலையின் மிகக் கடினமான மலைப்பாதைகளில் கோவையை சேர்ந்த மாணவர்கள் அபினவ்,பிரனேஷ்,சச்சின் ஆகிய மூவரும் தங்கள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்கங்களை பெற்று தமிழகத்திற்கும் கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்…
இந்நிலையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பதக்கங்களுடன் கோவை விமான நிலையம் வந்தடைந்த வீரர்களுக்கு அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்..
மாணவர்களுக்கு சால்வைகள் அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.சர்வதேச அளவில் கோவைக்கும் , இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த இந்த இளம் வீரர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
வரும் காலங்களில் இன்னும் பல சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறப் போவதாக மாணவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்தனர்.