நீடாமங்கலம்.,
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே தேவங்குடி பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வடக்கு ஒன்றியம் சார்பில் “நாளை நமதே! தமிழ்நாடும் நமதே!” என்ற தலைப்பில் பிரம்மாண்ட தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
விவசாயிகளையும், இளைஞர்களையும் சீர் குலைக்கும் திமுக அரசை கண்டித்து சக்தி கேந்திர தெரு முனை பிரச்சாரம் கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் பிஜேபி விவசாய அணித் தலைவர் அறிவு ராம் ,விவசாய அணி ஒன்றிய தலைவர் அறிவானந்தம், பிஜேபி நகரசெயலாளர் ,அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக இளைஞர் இளம் பெண் பாசறை செயலாளர் ஆர்.கே.பிரபாகரன், விவசாய அணி செயலாளர் ஆர் ராஜேந்திரன், இளைஞர் அணி செயலாளர் வள்ளி நாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.