கடலூர் காவல்துறையினரால் குட்கா போதை பொருட்கள் குற்ற வழக்கில் கைப்பற்றப்பட்ட போதை குட்கா பொருட்களை அழிக்க நீதிமன்றம் மூலம் உத்தரவு பெறப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் உத்தரவின்பேரில்,கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு,பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய ஏழு உட்கோட்ட காவல் நிலையங்களில் கைப்பற்றப்பட்ட குட்கா போதை பொருட்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் தமிழ்இனியன், பிரதீப், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ரவிச்சக்கரவர்த்தி,ராஜா, பார்த்திபன் ஆகியோர்கள் தலைமையில் உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள் முன்னிலையில் கடலூர் உட்கோட்டம் 622 கிலோ 498 கிராம், சிதம்பரம் உட்கோட்டம் 2507 கிலோ, விருத்தாசலம் உட்கோட்டம் 399 கிலோ 79 கிராம், நெய்வேலி உட்கோட்டம் 280 கிலோ 344 கிராம், சேத்தியாத்தோப்பு உட்கோட்டம் 196 கிலோ 887 கிராம், பண்ருட்டி உட்கோட்டம் 549 கிலோ 862 கிராம்,மற்றும் திட்டக்குடி உட்கோட்டம் 767 கிலோ 500 கிராம் என மொத்தம் 5323 கிலோ 431 கிராம் போதை பொருட்கள் தீ வைத்து கொளுத்தி முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *