காஞ்சிபுரம்

காஞ்சிபுரம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் சமூகசேவைப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா அறக்கட்டளை (HMIF) அதன் முக்கிய முயற்சிகளில் ஒன்றான ஹூண்டாய் IONIQ Forest திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை சிப்காட் இருங்காட்டுக்கோட்டையில் துவக்கியது. மனித குலத்திற்கான முன்னேற்றம் எனும் ஹூண்டாயின் உலகளாவிய கொள்கையின் அடிப்படையில், சூழலியல் முன்னெடுப்பு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியில் ஹூண்டாய்க்கு உள்ள அக்கறையின் ஒரு முக்கிய மைல்கல்லாக இந்த முயற்சி அமைகிறது.


அறங்காவலர்கள் கோப்லாகிருஷ்ணன் C S மற்றும் திரு. சரவணன் T ஆகியோர் ஜோங்கிக் லீ (Function Head – Corporate Affairs) மற்றும் திரு. புனீத் ஆனந்த (Vertical Head – Corporate Affairs and Corporate Communication & Social) ஆகியோருடன் இணைந்து இத்திட்டத்தைத் துவக்கி வைத்தனர்.

IONIQ Forest திட்டத்தின் கீழ் 12.16 ஏக்கர் திறந்தவெளி இட ஒதுக்கீடு (OSR) நிலம் தற்போது 28 உள்ளூர் வகைகளைச் சேர்ந்த சுமார் 5,500 மரங்களுடன் பசுமைப் போர்வையால் போர்த்தப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு அருகில் அமைந்து இந்த பல்லுயிர் காடு தற்போது, பல பறவை இனங்களைக் கவர்ந்து, சுற்றுச்சூழல் கற்றலுக்கான ஒரு வாழும் கல்விக்கூடமாகத் திகழ்கிறது.

இந்த சுற்றுச்சூழல் மீட்பு செயல்பாட்டில், குறிஞ்சி நாற்றுப் பண்ணை சுயஉதவிக் குழு மூலம் 15 பழங்குடி குடும்பத்தினர் பணியர்மர்த்தப்பட்டு, அவர்களது வாழ்வாதாரத்திற்கும் வழிசெய்யப்பட்டுள்ளது. ரூ.1.54 கோடி செலவில் ஊடுபயிர் முறையில் காய்கறி செடிகள் உள்ளிட்ட 11 லட்சம் மரக்கன்றுகள், கால்நடை தீவனம், பழங்கள் மற்றும் நாடு மரங்களை அக்டோபர் 2027க்குள் உருவாக்கி, உணவுப்பாதுகாப்பு மற்றும் நிலைப்புத்தன்மை கொண்ட வேளாண்மையை உறுதி செய்ய HMIF திட்டமிட்டுள்ளது.

நிகழ்ச்சியின் துவக்கவிழாவில் உரையாற்றிய அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் “IONIQ Forest என்பது ஹூண்டாய் மோட்டார் அறக்கட்டளையின் பசுமை முயற்சி என்பதையும் கடந்து, நிலைப்புத்தன்மையும் , சமூக அதிகாரமும் எவ்வாறு ஒருங்கிணைய முடியும் என்பதற்கான ஒரு வாழும் உதாரணம் ஆகும். IONIQ Forest திட்டம் மூலம், நாம் பசுமைப் பரப்பை விரிவாக்குவது மட்டுமின்றி, கற்பித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கான ஒரு திறன்மிகு தளத்தை உருவாக்குகிறோம். பழங்குடி மக்களுக்கான வாழ்வாதாரம், பல்லுயிர் காத்தல், நிதி கல்வியறிவு மற்றும் பொதுமக்களை ஈடுபடுத்தல் மூலம் இந்த மக்களையும், நிலத்தையும் பேணிக்காக்க உதவும் ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறோம். இத்திட்டம், எந்த அளவிலும், எந்த நிலப்பரப்பிலும் செயல்படுத்தக்கூடிய ஒன்றாகவும் உள்ளது.”

மேலும், பழங்குடி மக்களிடையே பொருளாதார உள்ளடக்கத்தை ஊக்குவிக்க, அவர்களுக்கு வங்கிக் கணக்கு துவங்கல், அத்தியாவசிய சேவைகள் பெறுதல் மற்றும் சில பயிற்சி வகுப்புகள் மூலம் அவர்களுக்கு பொருளாதார விழிப்புணர்வு ஏற்படுத்தல் ஆகியவற்றின் வாயிலாக அவர்களுக்கு ஆதரவு வழங்கப்படுகிறது. இந்த தோட்ட விளைப்பொருட்கள் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் இந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பான நிதி மேலாண்மையையும் உறுதி செய்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், நிலைப்புத்தன்மை கொண்ட காடுகளின் பராமரிப்பு மற்றும் வேளாண்மை சார்ந்த சாகுபடி ஆகியவற்றில் இந்த சமூகத்தினர் முனைப்புடன் ஈடுபட்டு, சூழல் மற்றும் சமூக முன்னேற்றத்தில் பங்களித்துள்ளனர்.

காடுகளாக புத்துயிர் பெற்றுள்ள இந்த நிலப்பரப்பில் அழகாக வடிவமைக்கப்பட்ட நடைபாதைகள், மீட்கப்பட்ட நீர்நிலை, கிராமத்து பாணியிலான குடிசை, தோட்டங்கள் மற்றும் சமூகவெளிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. உள்ளூர் சமூகங்கள் மற்றும் பள்ளிகளின் கல்வி சுற்றுலாவிற்கு இந்த ஹூண்டாய் IONIQ Forest திறந்திருக்கும்.

ஆந்திரப் பிரதேசத்திலும் இத்திட்டம் செயலாக்கம்

தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வெற்றிகரமான நிறைவேற்றத்திற்குப் பின், ஆந்திரப் பிரதேசத்தின் நந்தியால் மற்றும் கர்னூல் மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, இந்த நிலைப்புத்தன்மை கொண்ட வேளாண் காடுகள் மூலம் 290 பழங்குடி மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர். தற்போது, 600 ஏக்கர நிலப்பரப்பு சூழலியல் மீட்பு மற்றும் வாழ்வாதார உருவாக்கத்திற்காக தயார் செய்யப்படுகிறது. இம்முயற்சி, சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டத்தை பல்வேறு அளவுகளில் மேற்கொள்ளமுடியும் என்பதற்கு ஒரு சான்று. எதிர்காலத்தில் மேலும் பல பகுதிகளில் இத்திட்டத்தை செயல்படுத்த HMIF திட்டமிட்டுள்ளது.

படத்தில்: HMIF அறங்காவலர்கள் திரு. கோப்லாகிருஷ்ணன் C S மற்றும் திரு. சரவணன் T ஆகியோர் திரு. ஜோங்கிக் லீ (Function Head – Corporate Affairs) மற்றும் திரு. புனீத் ஆனந்த (Vertical Head – Corporate Affairs and Corporate Communication & Social) ஆகியோருடன் இணைந்து இத்திட்டத்தைத் துவக்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *