கமுதியில் தேசிய நூலகர் தின விழா கொண்டாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முழுநேர நூலகத்தில் நூலகர் வாசகர் வட்டம் நடத்திய தேசிய நூலகர் தினவிழா நடைப்பெற்றது.விழாவில் நூலக தந்தை எஸ் ஆர் .அரங்கநாதன் திருஉருவப்படத்தை கமுதி லெட்சுமி மோட்டார் உரிமையாளர் பாஸ்கர் பூபதி திறந்து வைத்தார்.
நூலகர் ஆர்.கண்ணதாசன் வரவேற்றுப் பேசினார்.வாசகர் வட்ட தலைவர் அ.கண்ணதாசன் தலைமை தாங்கி வாழ்த்திப் பேசினார்.விழாவில் கமுதி அரசு நூலகத்தில் பயின்று போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணி பெற்றுள்ள வெங்கடேஸ்வரன் உட்பட மூன்று பேருக்கு சால்வை அணிவிக்கப்பட்டு நினைவு பரிசுகளும் வாசகர் வட்டம் சார்பில் வழங்கிகௌரவிக்கப்பட்டது.
மேலும் விழாவில்ரூ.5000/ வழங்கி பெரும் புரவலராக பாஸ்கர பூபதியும் ரூ.10000/ வழங்கி கொடையாளராக பாண்டீஸ்வரி ஆகியோரை அபிராமம் நூலகர் இராமேஸ்வரி நீராவி நூலகர் கண்ணன் போட்டி தேர்வு மாணவர் மருது நூலகர் பிரிங்ஸ்டன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.நிறைவாக தட்டானேந்தல் நூலகர் சு.சுடலைக்கண்ணு நன்றி கூறினார்.