C K RAJAN
Cuddalore District Reporter
9488471235..
கடலூரில் முத்தமிழ் கல்வி கலை மற்றும் தமிழ் பணி அறக்கட்டளை ஆலோசனைக் கூட்டம்
கடலூர் முத்தமிழ் கல்வி, கலை மற்றும் தமிழ்ப்பணி அறக்கட்ட ளை ஆலோசனைக் கூட்டம்,மஞ்சு கலைக்கூடத்தில் நடைபெற்றது, ஆலோசனைக் கூட்டத்திற்கு கவிஞர் ம.ரா. சிங்காரம் தலைமை தாங்கினார்.
முத்தமிழ் கல்வி கலை மற்றும் தமிழ் பணி அறக்கட்டளையின் நிறுவனர் சித்தாந்த புலவர் பி. முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். கவிஞர் குறிஞ்சி ரவி அனைவரையும் வரவேற்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தலைவராக கவிஞர் ம.ரா.சிங்காரம், செயலாளராக கவிஞர் குறிஞ்சி ரவி, பொருளாளராக ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால், பெற்ற துணைத் தலைவர்களாக ஓய்வு தலைமையாசிரியர் கவிஞர் வே. ஜெகத்ரட்சகன், கவிஞர்.ராம. ஜெகதீசன், ஜே.அறிவழகன், இணைச் செயலாளராக வாழுமுனி என்கிற அரங்க அறிவொளி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
முதல் தமிழ் பணியாக பொதுமக்கள் படித்து பயன்படும் வகையில் தினமும் ஒரு திருக்குறள் எழுவது என்று தீர்மானிக்கப்பட்டு,உலக தமிழ்க்கழக நிர்வாகி புலவர் கதிர். முத்தையன் முதல்திருக்குறளும் அதன் பொருளும் எழுதி துவக்கி வைத்தார்.
இதில் உலக திருக்குறள் பேரவைத் தலைவர் பாஸ்கரன்,அரசு தலைமை மருத்துவமனை கிளை நூலக வாசகர் வட்ட கௌரவத் தலைவர் க.இளங்கோவன், பத்திரிகையாளர் கௌ. செ.குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பி.அண்ணாமலை,உதயா வெங்கடேசன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார்கள்.நிறைவாக அறக்கட்டளையின் பொருளாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் கவிஞர் ந. ஜெயபால் நன்றி கூறினார்.