பொள்ளாச்சி,
பொள்ளாச்சி நகராட்சியை நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. பாரதிய ஜனதா தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம் மக்களுக்கான எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை என்று கூறி அ.தி.மு.க. சார்பில் திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்ற பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ. ஜெயராமன் பேசுகையில், தமிழகத்திலேயே எந்த நகராட்சியிலும் இல்லாத வகையில், பொள்ளாச்சி நகராட்சியில் வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் குப்பை அள்ளாமல் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேட்டு நிலவுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் 90 சதவீதம் பணிகள் முடிக்கப்பட்ட பாதாள சாசக்கடை திட்டத்தில் ஆட்சி மாறி, நான்கு ஆண்டுகள் கடந்தும், 15 ஆயிரம் இணைப்புகள் இன்னும் கொடுக்கப்படவில்லை.
இணைப்புகள் கொடுக்க லஞ்சம் கேட்பது, நகராட்சிக்கு சொந்தமான இடங்களை
தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி வரைபட அனுமதி பெறுவதில் லஞ்சம் பெருகி வருகிறது.
மாட்டு சந்தை, காய்கறி மார்க்கெட் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. கழிப்பிட வசதியின்மை, இடிந்து விழும் நிலையில் உள்ள பஸ் ஸ்டாண்ட் முறையாக பராமரிப்பு இல்லை. தெருவிளக்குகள் பராமரிப்பு இல்லை ஆனால் நகராட்சி செயல்பாடுவதே லஞ்சம் வாங்குவதற்கு மட்டுமே போல் உள்ளது குப்பையில் ஊழல் பண்ணி சம்பாதிக்கின்றனர் பிறப்புக்கும் இறப்புக்கு ம் தவிர அனைத்திலும் லஞ்சம் இதற்கு ஆணையரம் உடந்தையாக உள்ளார் ஊழல் செய்த அனைவரும் சிறை செல்ல வேண்டும்
உள்ளாட்சி நகராட்சி நிர்வாகம் போன்ற பிரச்னைகளுக்கு காரணமான பொள்ளாச்சி நகராட்சியை கண்டிக்கிறோம் என்று தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. தாமோதரன், வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. கஸ்தூரி, அ.தி.மு.க. பொள்ளாச்சி நகர செயலாளரும், முன்னாள் நகராட்சி தலைவருமான கிருஷ்ணகுமார் பாஜக நிர்வாகிகள் சந்திரசேகர் வசந்த ராஜன் பரமகுரு தாமாக நிர்வாகிகள் குணசேகரன் ஜெகதீஷ் சந்திரகுமார் அ.தி.மு.க. நிர்வாகிகள், ஜேம்ஸ் ராஜா சக்திவேல் அருணாச்சலம் கனகு திருநீலகண்டன் ராஜ்கபூர் உட்பட ஏராளமானோர் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்