மேகதாதுவும், மீத்தேனும்” எனும் தலைப்பில் ( தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆடுதுறை இரா.முருகன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வீ.தமிழ்ச்செல்வன் வரவேற்புரை ஆற்றினார். மாநில இளைஞர் அணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி தொகுப்புரை வழங்கினார். தஞ்சாவூர் வடக்கு மாவட்டச் செயலாளர் பி.ஏ.அன்பு நன்றி கூறினார்.
கூட்டத்தில் கழகப் பொருளாளர் மு.செந்திலதிபன், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு.சின்னப்பா, கழக தீர்மானக் குழு செயலாளர் கவிஞர் மா.மணிவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். மாவட்ட கழக செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, எஸ்.கே.கலியமூர்த்தி, வெ.ஸ்ரீதரன், எஸ்.ஜெயசீலன், ப.பாலச்சந்திரன், க.இராமநாதன், செ.கொளஞ்சி, காசி.சி.சிவவடிவேல், கோ.ராமதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வேலா செந்தில் செய்தியாளர்,