தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம் அருகே வயதான தம்பதியை கத்தியால் தாக்கி விட்டு ஏழு பவுன் நகை மற்றும் பணம் ஒரு லட்சம் திருட்டு. குற்றவாளிகள் கைது. 6.5 பவுன் நகை பறிமுதல்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள கோவிந்தாபுரம் செங்காட்டுத் தோட்டத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி வயது 65 மற்றும் அவரது மனைவி பாலாமணி 56. கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி இரவு 9 மணி அளவில் வயதான தம்பதி இருவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து தண்ணீர் கொடுங்கள் அம்மா என்று தமிழில் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த பாலாமணி இந்த நேரத்தில் யார் தண்ணீர் கேட்கிறது என கதவை திறந்து பார்க்கும் போது இருசக்கர ஒரே வாகனத்தில் வந்த 4 மர்ம நபர்கள் வயதான தம்பதி பாலாமணி மற்றும் அவரது கணவர் கோவிந்தசாமி இருவரையும் தாக்கிவிட்டு பாலாமணி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் செயின் கம்மல் ஒரு பவுன் மற்றும் பீரோவில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்றனர்.

மர்ம நபர்கள் தாக்கியதில் கோவிந்தசாமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கிடந்தார். இவரது மனைவி பாலாமணி அருகில் உள்ள வீட்டுக்குச் சென்று நடந்த சம்பவத்தை கூறி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றனர். சம்பவம் குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து வயதான தம்பதிகளை தாக்கி விட்டு ஏழு பவுன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

திருப்பூர் மாவட்ட எஸ்பி, தாராபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவம் நடந்த இரவு சம்பவ இடத்துக்கு சென்று கைரேகை தடை அவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து சிசிடிவி காட்சிகளை வைத்து மூன்று தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் வயதான தம்பதி தாக்கிவிட்டு கொள்ளையடித்து திருடி சென்ற வழக்கில் குற்றவாளிகளை மூன்று தனிப்படைகள் அமைத்து திருப்பூர் மாவட்ட எஸ்பி, தாராபுரம் டிஎஸ்பி சிவக்குமார், இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் தலைமையில் சிசிடிவி கேமராக்கள் மற்றும் கை ரேகைகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் குற்றவாளிகள் பல்லடம் பகுதியில் பதுங்கி இருந்ததாக கிடைத்த தகவலின் பேரில் குற்றப்பிரிவு போலீசார் பல்லடத்திற்கு விரைந்து பதுங்கி இருந்த குற்றவாளிகளை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில்திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த குமரலிங்கம் கொழுமம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் சிவா வயது 22 மற்றும் இவரது தம்பி 18 வயது நிரம்பாததால் இவர் மற்றொரு வழக்கில் ஏற்கனவே சிறையில் ஒரு வாரத்திற்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் திருப்பூர் மன்னரை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் வெற்றிவேல் என்ற ஸ்ரீகாந்த் வயது 21,திருட்டு நகைகளை வாங்கி அடகு வைத்த திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியைச் சேர்ந்த வீரமணி என்பவரது மகன் சண்முகம் வயது 24 என்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளி தலைமறைவாக இருப்பது தெரிய உள்ளது.

இவர்கள் நான்கு பேரும் கஞ்சா அருந்திவிட்டு முதியவர்களை தாக்கி பணம் மற்றும் நகைகளை கொலை அடித்து செல்வதும் இவர்கள் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் போது பழக்கம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.

நான்கு குற்றவாளிகள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலவையில் உள்ளதாக தெரிகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *