கந்தர்வகோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் வானவில் மன்றத்தின் சார்பில் கடந்த ஆண்டு நடைபெற்ற அறிவியல் ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல் போட்டியில் அக்கச்சிப்பட்டியில் நீர் மேலாண்மை குறித்து ஆய்வு செய்து சோதனைகள் மூலம் அக்கச்சிப்பட்டி பகுதியில் உள்ள நீர்நிலைப் பகுதிகளை மாணவர்கள் சௌமியா, சிவகார்த்திகேயன், முகேஷ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்து ஆய்வு கட்டுரையாக சமர்ப்பித்து ஒன்றிய அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

அதற்கான பாராட்டு சான்றிதழை சுதந்திர தின விழாவில் மாணவர்களுக்கு வழங்கியும், போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களையும், வானவில் மன்ற ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தல் போட்டியில் மாணவர்களை சிறப்பாக தயார் செய்த அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ரகமதுல்லா மற்றும் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் பாராட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்விற்கு தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மருத்துவர் சுவாமிநாதன், பேராசிரியர் அமுதா, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சிவ மகேஸ்வரி பிரகாஷ்பள்ளி மேலாண்மை குழு தலைவி கலாராணி, முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் முத்துக்குமார், மலர்க்கொடி உறுப்பினர் செல்வி,பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஹானஸ்ட் ராஜ்,செந்தூர பாண்டியன்,சசி, சீதாலெட்சுமி, உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாராட்டினார்கள்.
இந்நிகழ்வில் பெற்றோர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள் மணிமேகலை ,சிந்தியா, நிவின், செல்விஜாய், வெள்ளைச்சாமி, ஜெம்ம ராகினி சகாய ஹில்டா கணினி உதவியாளர் தையல்நாயகி, மழலையர் ஆசிரியை கௌரி, கராத்தே பயிற்சியாளர் கதிர்காமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *