திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் வருடந்தோறும் சுதந்திர தினத்தன்று சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெறுவது வழக்கம்.
அதேபோல் நேற்று 79- வது சுதந்திர தினத்தையொட்டி ஆலயத்தில் மதியம் 12- மணிக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ.தெட்சிணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் வி.பிரிதிவிராஜன்,ஒன்றிய அவைத் தலைவர் ஆர்.கேசவன், ஒன்றிய துணைச் செயலாளர்கள் வி.கோபால், என்.ஞானசேகரரன், அமுதா தமிழரசன், ஒன்றிய பொருளாளர் நல்லம்பூர் கே.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் ஜி.விஜயபாஸ்கர், ஆர்.செல்வகுமார், பி.கரிகாலன் மற்றும் மாவட்ட, ஒன்றிய அணி நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழா சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆலய உதவி ஆணையர்/செயல் அலுவலர் நா.சுரேஷ், தக்கார்/ ஆய்வர் க.மும்மூர்த்தி, கண்காணிப்பாளர் தா.அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.