தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர், ஆக- 19. தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் நோயாளிக்கு அதிநவீன சிறுதுளை (MICS) இதய பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து சாதனை.
தஞ்சாவூர் அனு மருத்துவமனையி ல் கடந்த ஏப்ரல் மாதம் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கமலவேலு (55) அதிநவீன இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு 1 மாதத்தில் அவர் வெளிநாட்டில் அவரது தொழிலுக்கு சென்று நலமாக அவரது தொழிலை பார்த்துக்கொண்டு இருக்கிறார்.
இது குறித்து இதய – நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷிக் நிஹ்மத்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இந்த சிகிச்சைகள் அனைத்தும் பல இரத்தக்குழாய் இணைப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டன. பழமையான திறந்த இதய அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது இந்த புதிய அதிநவீன முறை சிகிச்சையில் மார்பின் இடப்பக்கத்தில் சிறிய வெட்டின் வழியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது இதில் மார்பு எலும்பு வெட்டப்படாது என்பதனால் நோயாளிக்கு ஏற்படும் உடல் பாதிப்பு குறைவாகவும், குணமடையும் காலம் வேகமாகவும் அமைகிறது.நோயாளிகள் எதிர் பார்த்ததைவிட விரைவில் எழுந்து நடக்க முடியும்.மேலும் வழக்கமான பைபாஸ் அறுவை சிகிச்சைவிட இயல்பு வாழ்கைக்குத் திரும்பும் நேரம் குறைவாக உள்ளது என தெரிவித்தார்.
இந்த சிகிச்சைகள் அனு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வருககிறோம்.அனு மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை பிரிவு, நவீன மருத்துவ முறைகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி நோயாளிகளுக்கு
தகுந்த அக்கறையோடு தரமான சேவையை வழங்கி வருகிறது, தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்ட மக்களுக்கு உயர்தர இதய சிகிச்சைகளை குறைந்த செலவில் பெற இயலுமாறு செயற்படுவதே எங்கள் நோக்கம் என கூறினர்.