தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம் அருகே கோழிப்பண்ணையை அகற்ற கோரி தமிழ்ப்புலிகள் கட்சி மனு…
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்கு கண்ணாங்கோவில் கிராமம் ஆலாம் பாளையம் பெரியார் நகர் அருந்ததியர் தெருவில் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியின் கிழக்கு பகுதியில் உள்ள மாராத்தாள் முருகேஷ் கோழிப்பண்ணை மற்றும் வடக்குப் பகுதியில் உள்ள ராசு சுலோச்சனா கோழிப் பண்ணையும் அமைந் துள்ளது. இந்த இரண்டு கோழிப்பண்ணையால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, மக்கள் உடல்நல பிரச்சினைகள் மேலும் குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது, அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர்.
இது தொடர்பாக பலமுறை மனுக்கள்
அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், பொதுமக்கள் சார்பிலம் தமிழ்ப்புலிகள் கட்சியின் குண்டடம் ஒன்றியச் செயலாளர் ர. சந்தோஷ் தலைமையில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சி யரிடம் கோழிப் பண்ணையை அகற்றுமாறு மனு அளித்தனர். அதே நேரத்தில், நடவடிக்கை எடுக்கப்படாவிடில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல்
நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஒண்டிவீரன், மாநில மாணவர் அணி செயலாளர் தில்லை. தொழிலாளர் அணி செயலாளர் பொன் செல்வம், மாவட்டத் துணை செயலாளர் வினோத், நகரச் செயலாளர் தண்டபாணி உட்பட சுமார் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.