துறையூர் மார்ச் -03
திருச்சி மாவட்டம் துறையூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி துறையூர் வட்டாட்சியர் பொறுப்பு சேஷாத்ரி மயும் தீப சானு, இ.ஆ.ப., அறிவுறுத்தலின்படி மாவட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை பாலக்கரையில் தேர்தல் தனி துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ் துவக்கி வைத்தார்.
இதில் ஜமீந்தார் பள்ளி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி எனது வாக்கு எனது எதிர்காலம் ,மனசாட்சியோடு வாக்களிப்போம், ஜனநாயகத்தை காப்போம், வாக்களிப்பது ஜனநாயக கடமை, 18 வயது உள்ளவர்களை புதிய வாக்காளர்களாக சேர்ப்போம் போன்ற வாக்காளர் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இப்பேரணி பாலக்கரையில் தொடங்கி திருச்சி ரோடு வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வந்து அடைந்தது.இதில் காவல்துறையினர், பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.