குறிஞ்சிப்படி வட்டம்
வடலூர் சேராக்குப்பம் ரயில்வே கேட் தெருவை சேர்ந்தவர் கண்ணுசாமி மகன் ஆனந்தவேலு (54) இவர் அதே பகுதியில் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார், இவருக்கும் அதே ஊரைச் சார்ந்த தயாளன் மகன்கள்செல்வம், (40)
ரணதேவன் (46) ,குருதேவன், (42) ஆகியோர்களுக்கும், இடையில்,ரேஷன் பொருட்களை கூடுதலாக கேட்டு தர மறுத்ததால் முன் விரோதம் இருந்து வருகிறது. இந்த நிலையில், நேற்று ரேஷன் கடை ஊழியர் சேராக்குப்பத்தில் இருந்து வடலூர் கடைத்தெருவிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார், அவர் வடலூர் ஐயனேரி அருகே சென்றபோது எதிரிகள் மூன்று பேரும் ஆனந்தவேலுவை, வழிமறித்து, ஆபாசமாக திட்டி ரீப்பர்சட்டத்தால்,தாக்கினார்கள்,
இதுல ஆனந்தவேலுவின் தலையில், பலத்த காயம் ஏற்பட்டது, காயம் அடைந்த ஆனந்த வேலுவை, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்றுவிட்டு, மேல்சிகிச்சிக்காக, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உறவினர் அரவிந்தன், ஆனந்தவேல் மகன் பிரிதிவிராஜ் ஆகியோர் மோட்டார் சைக்கிள்களை, தாக்கி சேதப்படுத்தினார்கள் இதில் மோட்டார் சைக்கிள் கண்ணாடி, விளக்கு கண்ணாடி சேதமானது,இதுகுறித்து புகாரின்பேரில், வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்வம் கைது செய்யப்பட்டார், ரணதேவன், குருதேவன்ஆகியோரை தேடி வருகிறார்கள்