மதுரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பனை விதையில் விநாயகர்..

விநாயகர் சதுர்த்தி வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பனை விதையில் விநாயகர் பொம்மையினை செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் பணியினை பசுமை செயற்பாட்டாளர் அசோக்குமார் துவங்கியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி அன்று களிமண்ணால் ஆன விநாயகர் வாங்கி அதனை வழிபட்டு பிறகு நீர் நிலைகளில் கரைப்பது பொதுவான வழக்கம். அதற்கு மாறாக பனை விதையில் விநாயகர் கொண்டு வழிபாடு செய்து பிறகு அதனை நீர் நிலைகளில் கரைப்பது போன்று நீர் நிலைகளில் தூக்கி போடுவதன் மூலமாக பனைவிதை நீரில் அடித்துச்சென்று கரை ஒதுங்கும் பட்சத்திலோ நீர் நிலைகளின் கரைகளின் ஓரமாக விதைத்து வைப்பதன் மூலமாக பனைமரம் முளைத்து வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இந்த பனை விதை விநாயகர் மூலம் சுற்றுச் சூழலுக்கு கேடு என்பது கிடையாது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக இந்த பனை விதை விநாயகரை உருவாக்கியுள்ளார். அழிவின் விளிம்பில் இருக்கும் மாநில மரமான பனை மரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த பனை விதை விநாயகரை பொதுமக்களுக்கு இலவசமாக கடந்த 5 வருடங்களாக வழங்கி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *