குச்சனூர் பேரூராட்சியில் ரூபாய் 1.40 கோடி மதிப்பீட்டில் மின்மயான பணிகளுக்கு பூமி பூஜை தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பொது மயானத்தில் மின் தகன வசதி ஏற்படுத்துவதற்கான பூமி பூஜையை பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள் உள்ளன இந்த நகராட்சிகளில் பொது மக்களின் பயன்பாட்டிற்க்கு மின் மயானம் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது இதன்படி மாவட்டத்தில் உள்ள 22 பேரூராட்சிகளிலும் மின்மயான வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று டவுன் பஞ்சாயத்து மக்கள் பேரூராட்சி மன்றம் மூலமாக கோரிக்கை வைத்தனர்
இந்த கோரிக்கை ஏற்க்கப்பட்டு மாவட்டத்தில் முதற் கட்டமாக 11 பேரூராட்சிகளில் மின் மயானம் வசதி ஏற்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்ய ப்பட்டுள்ளது. இதன்படி குச்சனூரில் மின்தகன வசதி ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன
இதன்படி குச்சனூர் பேரூராட்சி பொது மயானத்தில் மின் தகன வசதி ஏற்படுத்த ரூபாய் 1.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குச்சனூர் உப்புக்கோட்டை சாலையில் உள்ள பொது மயானத்தில் மின் தகன வசதி ஏற்படுத்துவதற்கான பூமி பூஜைக்கு பேரூராட்சி மன்ற தலைவர் பி.டி. ரவிச்சந்திரன் தலைமை வகித்து பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் முருகன் இளநிலை உதவியாளர் இளவரசு பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அ. மணிகண்டன் உள்பட பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் பேரூராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்