திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர்களால் வனத்தீ மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த கொடைக்கானல் வன உயிரின சரணாலய சூழல் உணர்வு மண்டல கூர்ந்தாய்வுக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர்.சரவணன் அவரது தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வன அலுவலர்.அரவிந்த் கொடைக்கானல் வட்டம், மாவட்ட வன அலுவலர்.நாக சதீஷ் கிடிஜாலா திண்டுக்கல் வன கோட்டம்,ஆகியோர் உட்பட கொடைக்கானல் மற்றும் திண்டுக்கல் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.