தேனி மாவட்டம் கம்பம் எஸ்.வி. மெட்ரிக் பள்ளியின் 38 ஆவது ஆண்டு விழா ஒ.ஆர்பரவு காவல் தலைவர் ஒ.ஆர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது .
இந்த விழாவில் ஒ.ஆர் குமரேசன் பேசும்போது இந்த பள்ளியின் நிறுவனத் தலைவர் சின்னத்துரை கல்வித்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிய காலங்களில் அந்த பள்ளிகளில் படித்த அனைத்து மாணவர்களும் 100 சதவீதம் தேர்ச்சி பெறும் அளவுக்கு மாணவர்களுக்கு நல்ல கல்வியை போதித்தவர்.
இதன் பின் அந்தப் பள்ளியில் இருந்து ஓய்வு பெற்று வீரபாண்டி கல்லூரியில் 12 ஆண்டுகள் ஆங்கில பேராசிரியராக பணியாற்றியவர் இவரது கல்வி கால அனுபவம் இவரது துணைவியார் ராஜாத்தியின் நிர்வாக திறமையும் இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல கற்பிக்கும் திறனால் இந்த பள்ளி மாணவர்கள் நல்லதொரு கல்வியை கற்று தங்களுடைய வாழ்க்கையை வளமாக்குவதற்கு பயன்படுத்தி வருகின்றனர்
எஸ் வி மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் சென்னை மற்றும் வட மாநிலங்களிலும் சவுதி அரேபியா மலேசியா சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் பணியாற்றி வருகின்றனர் எனவே இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்த்து அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய வழிவகை செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசினார். பள்ளி நிறுவனத்தின் தலைவரும் பள்ளி முதல் வருமான சின்னத்துரை நன்றி கூறினார்.